வரலாறு


 • அழகு முத்துக்கோன் : மாவீரன் அழகுமுத்துக்கோன் (Maveeran Alagumuthu Kone, 1710–1759) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார். இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன். தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் (அழகுமுத்து இவர்களின் குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீர அழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார். முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன். இதனால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு பிரிட்டிஷ் ஜெனரல் மருதநாயகம் பிள்ளை (முகம்மது யூசுப் கானை) அனுப்பி வைத்தது. வீர அழகுமுத்துக்கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் (கான் சாஹிப்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். பிறகு 248 வீரர்களின் வலது கரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பீரங்கி முன் நின்ற வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகளும் மார்பில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. “மாவீரன் அழகுமுத்துக்கோன்”, குங்குமம் வார இதழில் வெளியான தமிழ் மன்னின் வீர மைந்தர்கள் என்ற தொடர்கட்டுரைகளில் ஒன்று பெரிய வீரப்ப நாயக்கர் எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தில் இடம் பெற்றுள்ள கோபால வம்சம், கிருஷ்ண கோத்திரம் என்ற சொற்களைக் கொண்டு இவர் கோனார் குலத்தில் சேர்வைக்காரர் என்ற பட்டம் பெற்றவர் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. இன்றும் மன்னர் அழகுமுத்துக்கோன் நேரடி வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் ஜீலை 11ஆம் நாள் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2012ஆம் ஆண்டு வீரன் அழகுமுத்துக்கோன் குறித்த ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.2015ஆம் ஆண்டு திசம்பர் 26ஆம் நாளன்று இந்திய அரசின் சார்பில் தபால் தலை ஒன்று வெளியிடப்பட்டது.

  Maveeran Alagumuthu Kone : Maveeran Alagumuthu Kone Yadav (11 July 1710 – 19 July 1759), from Kattalankulam in Thoothukudi District, was an early Chieftain and freedom fighter against the British presence in Tamil Nadu. Born into a Konar family, he became a military leader in the town of Ettayapuram, and was defeated in battle there against the British and Maruthanayagam’s forces. He was executed in 1759. In his memory, the government of Tamil Nadu conducts a Pooja ceremony every year on 11 July. A documentary film based on his life was released in 2012. As a tribute to Kone, the Government of India released a Postage Stamp featuring him on 26 December 2015. #வரலாறு #AlagumuthuKone #MaveeranAlagumuthuKone #MaveeranAlagumuthuKoneHistoryinTamil #Radiopettifm

 • #அஞ்சலைஅம்மாள் :- அஞ்சலை அம்மாள் (Anjalai Ammal, 1890 – சனவரி 20, 1961) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார். அஞ்சலை அம்மாள் 1890 ஆம் ஆண்டில் கடலூரில், முதுநகர் என்ற நகரில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார். இவர் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். கணவர் முருகப்பா ஒரு பத்திரிகையில் முகவராக இருந்தார். மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து அஞ்சலை அம்மாள் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1921 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தனது குடும்ப சொத்தாக இருந்த நிலங்களையும், வீட்டையும் விற்று இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பணத்தை செலவிட்டார். 1927 ஆம் ஆண்டு நடைபெற்ற நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் அஞ்சலை பங்கேற்றார். தனது ஒன்பது வயது மகள் அம்மாக்கண்ணுவையும், இப்போராட்டத்தில் ஈடுபடுத்தி அக்குழந்தையுடன் சிறைக்குச் சென்றார். தனது ஒன்பது வயதுக் குழந்தையை சிறையிலேயே வளர்த்தார்.[1] சிறையில் இருந்த அம்மாக்கண்ணு, அஞ்சலையம்மாள் இருவரையும் காந்தியடிகள் அடிக்கடி பார்வையிட்டார். அம்மாக்கண்ணு என்ற பெயரை லீலாவதி என்று மறுபெயரிட்டு தன்னுடன் வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தின் போது அஞ்சலை அம்மாள் கடுமையாகக் காயமடைந்தார். 1931 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரசு கூட்டத்திற்கு, அஞ்சலை தலைமை தாங்கினார். 1932 ஆம் ஆண்டு மற்றொரு போராட்டத்தில் கலந்துகொண்டார் என்பதற்காக இவர் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்த நேரத்தில் இவர் கர்ப்பமாக இருந்தார் என்பதனால் பிணையில் விடுவிக்கப்பட்டார். மகன் பிறந்த இரண்டு வாரங்களுக்குள் அஞ்சலை மீண்டும் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.[2] ஒருமுறை காந்தி கடலூருக்கு வந்தபோது அஞ்சலை அம்மாளை சந்திக்க முயன்றார். பிரித்தானிய அரசாங்கம் காந்தியடிகள் அஞ்சலை அம்மாளைப் பார்க்க தடை விதித்தது. ஆனால் அஞ்சலை அம்மாள் பர்தா அணிந்து ஒரு குதிரை வண்டியில் வந்து காந்தியடிகளை சந்தித்தார். அஞ்சலையின் துணிவைக் காரணமாகக் காட்டி, காந்தியடிகள் இவரை தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று அழைத்தார். 1947 இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், அஞ்சலையம்மாள் மூன்று முறை தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1961 ஆம் ஆண்டு, சனவரி மாதம் 20 ஆம் நாள் அஞ்சலை அம்மாள் காலமானார்.

  #AnjalaiAmmal :- Anjalai Ammal was a prominent freedom fighter in the Indian struggle for independence. She was born in 1890 in a simple town called Mudhunagar which is located in Cuddalore. She was born in a simple family. She studied up to fifth grade. Her husband was Murugappa who was an agent in a magazine. She started her political life by joining the Non – Cooperation movement of Mahatma Gandhi. She was the first woman from south India to take part in the Non – Cooperation movement in 1921. She sold her family lands, her house and spent the money for India’s struggle for freedom. In 1927 she participated in the struggle for removing Neelan’s statue. She also made her nine-year-old child, Ammakannu to participate in the struggle for removing Neelan’s statue and went to jail along with her daughter. She raised her nine-year-old child in the prison. Gandhi visited Ammakannu and Anjalai Ammal often in the prison. He renamed Ammakannu as Leelavathi and took her with him to Vaardha ashram. She was badly wounded due her participation in the salt sathyagraha in 1930. In 1931, she presided over The All India Women Congress Meet. In 1932, she took part in another struggle for which she was sent to Vellore prison. She was pregnant while she was sent to Vellore prison. She was released on bail on account of her delivery. Within two weeks after her son was born, she was sent back to the Vellore prison. Once Gandhi came to Kadalur, but the British government prohibited him to visit Anjalai Ammal. But Anjalai Ammal came in a horse cart wearing burqa and visited him. Due to her courage, Gandhi called her South India’s Jhansi Rani.[1] After India’s independence in 1947, she was elected as the member of the Tamil Nadu legislative assembly thrice. She died on January 20, 1961.

 • திருப்பூர் குமரன் வரலாறு | Tirupur Kumaran History in Tamil |RJ Sharmila | வரலாறு | Radio Petti 5.1

 • ஐசாக் நியூட்டன் வரலாறு | Isaac Newton | RJ Sharmila | வரலாறு

 • அன்னை தெரசா வரலாறு | Mother Teresa History in Tamil | RJ Sharmila | வரலாறு |Radio Petti 5.1

 • கிறித்தோபர் கொலம்பஸ் வரலாறு | Christopher Columbus | RJ Sharmila | வரலாறு | Radio Petti 5.1

 • இராணி இலட்சுமிபாய் (ஜான்சி ராணி) வரலாறு | Jhansi Rani | RJ Sharmila